இந்த வருட இறுதிக்குள் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 மில்லியனை எட்டக்கூடும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த இலக்கினை அடைந்தால், கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 மில்லியனை எட்டுவது இதுவே முதன் முறையாகும்.
இரண்டு மில்லியன் இலக்கு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டிற்கு 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். எவ்வாறாயினும், இம்மாதம் முழுவதும் இரண்டரை இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த இலக்கை எட்டிய பின்னர், 2018ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மில்லியன் இலக்கை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அந்த சுபை சுட்டிக்காட்டியுள்ளது.