இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அனுராரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விடைபெறும் முன்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்க்ஷவுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதன்படி பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றுடன் (13) தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
60 பேர் மாத்திரமே தற்போது பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது.
இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே தற்போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகளும் உணவு பரிசோதகர்களும் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமையானது கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.