Loading...
ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் 39 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் ரஷ்ய பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் குறித்த ரஷ்ய பிரஜைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Loading...