பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த வகையில் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியால் நல்ல பலன் கிடைக்கும்.
எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆசை தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது தான். இதற்கு என்ன இயற்கை வழிமுறைகள் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி
மலைமுடிக்கு என்னதான் நிறைய பராதரிப்பை செய்தாலும் ஹேர் பெக் போடுவது மிகவும் அவசியம். முதல் ஹேர் பெக் செய்ய தேவையான பொருட்கள் வெந்தயம் இரண்டு ஸ்பூன், செம்பருத்தி 5, மற்றும் செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை அரைத்து தலையில் 3 நிமிடங்கள் போட்டு பின்னர் வழமையாக தலைமடியை கழுவதை போல கழுவ வேண்டும். முதலில் வெந்தயத்தை ஊறவைத்து அதனுடன் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை தலையில் தடவி பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த ஹேர் பெக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
தேவைப்பட்டால் இரண்டு முறையும் பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் முடி நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.