மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் அதிவேகமாக அம்புலன்ஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது
எனினும் , நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.