புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டை ஆவலுடன் வரவேற்க அனைவரும் காத்திருக்கின்றனர். வாஸ்து படி புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக நாம் சில பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதோடு இந்த பொருட்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துகொள்ளுங்கள்.
இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டின் செல்வம் பெருகும் என வாஸ்து கூறுகிறது. அவ்வாறு புத்தாண்டுக்கு முன்பாக வீட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய பொருட்களை குறித்து தற்போது நாம் இங்கு பார்ப்போம்.
புல்லாங்குழல்
புத்தாண்டுக்கு முன் கிருஷ்ணருக்குப் பிடித்த புல்லாங்குழலை வீட்டில் கொண்டு வருவது நன்மை அளிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் புல்லாங்குழல் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். கிருஷ்ணரின் அருள் கிடைக்கும்.
விநாயகர் சிலை
வியாபாரம் செழிக்க புத்தாண்டுக்கு முன் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு வருவது மிகவும் நல்லது. புத்தாண்டின் முதல் நாளில் விநாயகப் பெருமானின் சிலையை முறையான நடைமுறைகளுடன் வழிபட வேண்டும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் அதிகரிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும், செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.
மயில் இறகு
வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. இதன் மூலம் வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். புத்தாண்டின் முதல் நாளில் பூஜை செய்த பிறகு மயில் தோகையை பத்திரமாக வைத்துக் கொள்வதன் மூலம் நிதி பிரச்சனைகளை குறைத்து வீட்டிற்குள் பணத்தினை ஈர்க்கும்.
காமதேனு சிலை
சனாதன தர்மத்தின்படி, பசுக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானவை. புத்தாண்டின் முதல் நாளில், வெள்ளியால் செய்யப்பட்ட காமதேனுவை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள் விலகும். காமதேனுவை வழிபடுவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான கஷ்டங்களும் நீங்கி வருமானமும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.