பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சக மனிதர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடனை வாங்கி சரியாக கூறிய திகதியில் கொடுத்து விட வேண்டும் என நினைப்போம். ஆனால் சில குடும்ப சூழ்நிலைகள் காரணமாக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
அப்படியானவர்கள் எவ்வாறு கடனை கொடுப்பது? அல்லது கடன் பற்றிய தகவல்களை எப்படி மற்றவர்களிடம் இருந்து மறைப்பது? என சிந்தித்து கொண்டிருப்பார்கள். கடன் வாங்கி அதை அடைக்க முயற்சித்தும், அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் சில வாஸ்து குறைப்பாடுகளை சரிச் செய்து கொள்வது அவசியம்.
ஏனெனின் வாஸ்து குறிப்புக்களை சரிச் செய்து கொள்வதால் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். வாஸ்துப்படி, ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டுமானால், குடியிருக்கும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருக்க வேண்டும்.
அப்படி இல்லாதபட்சத்தில் அந்த வீட்டில் பண பிரச்சனை இருப்பதோடு அவர்கள் சில சமயங்களில் கடனாளியாகவே வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கும்.
அந்த வகையில், வருகின்ற 2025ஆம் ஆண்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால் சில வாஸ்து பரிகாரங்களை செய்ய வேண்டும். இது தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து பரிகாரங்கள்
1. வீட்டில் பணம் சேமித்து வைக்க சிறந்த திசை வடக்கு திசை எனப்படுகின்றது. இந்த திசையில் அலுமாரியை வைப்பது மங்களகரமானது. ஏனெனின் வடக்கு திசையில் குபேரர் மற்றும் லட்சுமி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கடன் பிரச்சினையுள்ளவர்கள் கடன் தொல்லையில் இருந்து வெளியில் வருவதற்காக இந்த முறையை கையாளலாம்.
2. வடக்குத் திசையில் லட்சுமி தேவி மற்றும் குபேரர் சிலை வைப்பது வீட்டிற்கு நல்லது. சிலை இல்லாதவர்கள் படம் வைத்து வழிபடலாம். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் போது வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
3.வாஸ்துப்படி சனிக்கிழமைகளில் காலையில் குளித்து விட்டு அரச மரத்தடியில் தீபம் ஏற்றி, வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி செய்து வந்தால் கடனில் இருந்து விடுபடலாம். ஏனெனில் அரச மரத்தில் விஷ்ணு பகவான் வசிப்பதால் பண வரவு அதிகமாகும்.