மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும், நடிகையுமான நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நயன்தாராவை புகழ்ந்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
அழகான போராளி! அனைத்து வலி மற்றும் தோல்விகள் மத்தியில் இங்கே இதுவரை கடந்து வந்ததற்காய் வாழ்த்துக்கள்! அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில் இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்! மெக்சிகோவில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்களின் பெயரை அதில் இழுத்தாலும் கூட சிரித்துக் கொண்டே செல்கிறீர்கள்!
வலுவாக, நம்பிக்கையுடன், நல்லதையே நினைப்பது நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிது அல்ல. நான் சந்தித்த பெண்களில் மிகவும் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என விக்னேஷ் சிவன் பதிவிட்டு நயன்தாராவை மகிழ்விக்க ட்வீட் செய்துள்ளார்.