ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்தாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு திருமண வாழ்கை மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்ததன் பின்னர் வாழ்வில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள்.
அப்படி திருமணத்தால் ராஜ யோகத்தை அனுபவிக்கு ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கும் அதே நேரம், நேர்மையின் சின்னங்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எந்த விடயத்தை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அதை அடைவதற்கு தங்களின் கடின உழைப்பை முழுமையாக வழங்க தயாராக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த ஆண்களின் புத்திசாலித்தனம் மற்றும் உண்மை ஆகியன திருமண வாழ்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றும்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த இந்த ராசியனர் திருமணத்தின் பின்னர் நிதி ரீதியில் அசுர வளர்ச்சியடைவார்கள். இதனால் அவர்களின் மணவாழ்க்கை தித்திப்பு நிறைந்ததாக மாறும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்களுக்கு புத்திக்கூர்மையும், விசுவாசமும் இயல்பிலேயே அதிகமாக காணப்படும்.
வியாபாரம் மற்றும் நிதி முகாமைத்துவ அறிவு இந்த ராசி ஆண்களுக்கு செழிப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.
தங்களின் குடும்பத்தை செல்வ செழிப்புடன் வாழ வைக்க வேண்டும் என்ற உந்துதல் இவர்களுக்கு அதிகமாக இருப்பதனால், திருமணத்தின் பின்னர் இவர்கள் வாழ்க்கை வெகுவாக முன்னேற்றம் அடையும்.
துலாம்
துலா ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே வசீகரமான தோற்றமும் இராஜதந்திர ஆளுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவரை்கள் திருமண வாழ்க்கை மீது அதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை மகிழ்சிச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் திருமணத்தின் பின்னர் இவர்கள் நிதி ரீதியில் வளர்ச்சியடைய காரணமாகின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். பிடிவாத குணம் இவர்களிடம் சற்று அதிகமாவே இருக்கும்.
இவர்கள் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணத்தை திருமணத்தின் பின்னர் ஏற்படுகின்ற பொறுப்புணர்வு இரட்டிப்பாக்கிவிடும். அதனால் திருமணத்தின் பின்னர் விரைவில் பணம் சம்பாதிப்பார்கள்.