புதிய ஆண்டில் கால் பதிப்பதிப்தற்கு இன்னும் சில தினங்கள் மாத்திரமே இருக்கின்றது. பொதுவாகவே வருடம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால், ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்ககான ராசிப்பலன் கணிபின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதிய ஆண்டில் உயர் பதவியில் அமரக்கூடிய யோகம் காத்திருக்கின்றது.
அப்படி புதிய ஆண்டில் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றத்தை அடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் மற்றும் நிதி ரீதியில் பல வழிகளிலும் சாதக பலன்கள் கிடைக்கும்.
கிரக நிலைகளின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு பின்னர் குரு பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். தொழில் தொடர்பில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்செய்திகளால் மகிழ்சி அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை வீடு தெடி வரும். எதிர்ப்பாராத பணவரவு கிடைக்கும் வாயப்புகளும் காணப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். 2025 ஆம் ஆண்டு இவர்களின் நீண்ட கால உழைப்புக்கு பலன் கொடுக்கும் வகையில் அமையப்போகின்றது.
புதிய ஆண்டில் அதிகாரம் மிக்க உயர் பதவியில் அமரும் வாய்ப்பு ரிஷப ராசியினருக்கு கிடைக்கப்போகின்றது.
இவர்களக்கு சனி, குரு, ராகுவின் முழுமையான ஆசி கிடைப்பதால், மனதுக்கு பிடித்த வேலையை செய்து கை நிறைய சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மே மாதத்திற்கு பின் நிகழும் குரு பெயர்ச்சியால், தொழில் ரீதியில் இருந்துவந்த அத்தனை தடைகளும் நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக இருக்கப்போகின்றது. குறிப்பாக தொழில் நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்ற பலன்கள் கிடைக்கப்போகின்றது.
பணியிடத்தில் தற்போது இருக்கும் நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்லும் யோகம் உள்ளது.
குருவின் ஆசியால் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுப்படுவர்களுக்கு நிதி ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது.