ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் கிரங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என நம்ப்படுகின்றது.
குறிப்பாக இரண்டு கிரங்கள் ஒரு ராசியில் இணையும் போது உருவாகின்ற விசேட ராஜ யோகங்கள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பேரதிர்ஷ்டத்தை கொடுக்கும் என குறிப்பிடப்டுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிரக நிலை மாற்றங்களின் பிரகாரம் சூரியபகவான் மற்றும் புதன் பகவான் மகர ராசியில் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகவுள்ளது.
தாதித்ய ராஜ யோகமானது 2025 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்வில் அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு புதாதித்ய ராஜயோகத்தால் 2025 ஆம் ஆண்டு வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்கள் நிகழப்போகின்றது.
குறிப்பாக வியாபாரம் மற்றும் தொழில் ரீதியிலான விடங்களில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இவர்களின் நீண்ட நாள் கனவு இந்த ஆண்டில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
புதாதித்ய யோகம் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மகரம்
2025 இல் உருவாகும் புதாதித்ய யோகம் மகர ராசியில் உருவாவதால், இவர்களுக்கு மிகப்பெரும் வளர்ச்சியை கொடுக்கும். இவர்களுக்கு எதையும் சாதித்துவிடும் அளவுக்கு துணிவு பிறக்கும்.
புதனின் புத்திக்கூர்மையும் சூரிய பகவானின் தலைமைத்துவ பண்புகளும் இணைவதால், மகர ராசியினருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு காணப்படுகின்றது.
இலக்குகளை நோக்கி புத்துணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். இவர்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்வில் மிகவும் முக்கியமான விடயங்கள் 2025 ஆம் ஆண்டில் நடக்க வாய்பு காணப்படுகின்றது.
கும்பம்
கும்ப ராசியினருக்கு புதாதித்ய ராஜயோகத்தால் 2025 இல் பெருமளவான சாதக பலன்கள் காத்திருக்கின்றது. குறிப்பாக பணவரவு செழிப்பாக இருக்கும்.
பல்வேறு வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்டுகின்றது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும்.
புதிய வீடு அல்லது வாகனம் வாங்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். மனநிலையில் தெளிவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.