ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார். அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.
அதனால் சனி பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். குறித்த சனிப்பெயர்சியின் அடிப்படையில் புதிய ஆண்டில் குறிப்பிட்ட சில ராசியினர் பெரும் துன்பத்தையும் சிக்கல்களையும் சந்திக்கவுள்ளார்கள்.
அப்படி சனிப்பெயர்ச்சியால் வாழ்வில் பல்வேறு வகையிலும் பாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள சனி பெயர்ச்சியின் போது மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால் இவர்களுக்கு அடுத்த 2 1/2 ஆண்டுகளுக்கு வாழ்வில் சோதனைகள் அதிகமான இருக்கும்.
எதிர்பாரத பிரச்சினைகளால் மனத்தில் கவலை தேன்றும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த ராசியினருக்கு 2025 சனி பெயர்ச்சி ஏழரை சனியின் முதல் கட்டடமாக அமையப்பொகின்றது.
குடுபத்தில் அமைதியின்மை மற்றும் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சினைகள் அடிக்கடி நிகழும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தொழில் விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் தொடர்பிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு 2025 இல் சனி பகவான் செல்லவுள்ளார். அதனால் மார்ச் மாத்தில் இருந்து தேவையற்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்டுகின்றது.
உடல் நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.எனவே ஆரோக்கியம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
நீதிமன்ற வழக்குகளுக்கு அதிக பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படலாம். பேசும் போது மிகவும் கவனம் தேவை. சிறிய வாய் தகராறுகள் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளதால் இந்த ராசியில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்வில் பல்வேறு வகையிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்படடும் அளவுக்கு அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தொழில் நிமிர்த்தம் அல்லது பிற விஷயங்களுக்காக இடமாற்றத்தை ஏற்பட கூடிய பிராப்தம் இருக்கும்.உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமான பாதிக்கப்படும்.
குருபகவான் ஆசியும் கூடவே இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கம்.ஆனால் மனநிம்மதி அற்ற நிலையில் இருக்க நேரிம்.