சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் பலன்களை தருகிறார்.
சனி பகவானுக்கு அனைத்து மக்களும் பயப்படுவார்கள். நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு அமைய பலன்களை அள்ளித்தருவார். 2025 ஆம் ஆண்டில், சனி கிரகம் ராசியை மாற்றப் போகிறது.
இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். ஆனால் 2025 இல் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ஏழரை சனி ஆரம்பமாக உள்ளது.
இதற்கு சில பரிகாரங்களை இந்த குறிப்பிட்ட ராசிகள் செய்தால் அவை வரப்போகும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025 ஏழரை சனி தாக்கம்
2025 ம் ஆண்டு மார்ச் 29 ம் திகதி வரை கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனி தாக்கத்தால் பாதிக்கபடுவீர்கள்.
இதற்கு பின்னர் சனி கும்பத்திலிருந்து மீன ராசிக்குள் நுழையும் போது, சிம்மம் மற்றும் தனுசு ராசியில் சனியின் தாக்கம் தொடங்கும். இந்த தாக்கம் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும். இந்த ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
மீனம், தனுசு, சிம்மம்
சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருக்க வேண்டும்.
விரதமிருக்கும் சமயத்தில் சனிகவானின் சிலைக்கு எள் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்யலாம். இதனால் சனி தாக்கம் குறையும்.
ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது அதாவாசை நாளில் தொழுநோயாளிகளுக்கு உணவு, காலணிகள், உடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
நாம் கருப்பு நாய் மற்றும் கருப்பு மாட்டுக்கு ரொட்டி கொடுத்தால் சனியை மகிழ்விக்க முடியும்.
இதனால் சனி தாக்கம் குறையும். இது தவிர மீன்களுக்கு குளத்தில் மாவை உருண்டைகளாகப் போடலாம்.
சனியை வழிபடும் போது சனி மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். இதன்போது மந்திரங்களை சரியாக உச்சரிப்பது அவசியம்.
ஒவ்வொரு சனிக்கிழமை வரும்போதும் சனி பகவானுக்கு கறுப்பு நிறம் பிடிக்கும் என்பதால் கறுப்பு நிற உடை அணியலாம்.
இப்படி செய்வதன் மூலம் சனி தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.