பொதுவாகவே அனைவருக்கும் தங்களின் திருமணம் என்பது மிகப்பெரும் கனவாக இருக்கும். வாழ்வில் திருமணம் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஒருவருக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமைந்து விட்டால், வாழ்வில் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் சுலபமாக சமாளித்து விடலாம்.
திருமணம் செய்யும் முன்னர் சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டியது இன்றியமையாதது. அதனால் தான் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினர் திரமண வாழ்வில் அதிக துன்பங்களை அனுபவிப்பார்களாம்.
அப்படி முன்னர் இருந்த மகிழ்சியை திருமணத்திற்கு பின்னர் முற்றாக இழந்துவிடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் ராசி
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
தேவையின் நிமிர்த்தம் மட்டுமே மற்றவர்களிடம் பழகும் குணம் கொண்ட இவர்கள் திருமணத்திற்கு முன்னர் அனுபவித்த மகிழ்ச்சி திருமணத்தின் பின்னர் இருக்காது.
இந்த ராசி அமைப்பின் அடிப்படையில் திருமணத்துக்கு பின்னர் பல்வேறு வகைகளிலும் பிரச்சினைகளை அனுபவிக்க நேரிடும். இவர்கள் சற்று விட்டுக்கொடுப்பு மனபான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
துலாம் ராசி
துலா ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் ஒருவித சந்தேக உணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள். இவர்களின் மனம் யாரையும் எளிதில் நம்பாது.
காதல் விடயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் சந்தேக குணம் காரணமாக திருமணத்தின் பின்னர் வாழ்வில் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
அவர்களின் மனநிலையை எளிதில் யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது. இவர்களின் திருமண வாழ்க்கை சற்று கடினமானதாகவே இருக்கும்.
கும்பம் ராசி
கும்ப ராசியில் பிறந்தவர்கள் மனதில் எதையும் மறைத்து வைக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின்னர் இவர்களின் அதிக வெளிப்படை தன்மையால் நிறைய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
உறவுகளிலும் அதிக விளையாட்டுத்தனத்துடன் நடந்துக்கொள்ளும் இவரடகளுக்கு வார்த்தையை காப்பாற்றும் பழக்கம் சுத்தமாக இருக்காது.
இவர்கள் நினைத்ததை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைக்கும் குணம் இவர்களக்கு இருப்பதால், திருமண வாழ்க்கை சவால் நிறைந்ததாக மாறிவிடும்.