நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
உங்கள் ராசியில் குருபகவான் 11 வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார்.
பணத்தின் வரவில் கணிசமான வருமானம் கிடைக்கும்.
வசதி வாய்ப்புகள் உங்களை தேடிவருவதுடன் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
குடும்பத்தின் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
காதல் வாழ்க்கை வெற்றிகரதாக முடியும்
சிம்மம்
உங்கள் ராசியில் 10வது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார்.
இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு சார்பாக செயல்படுவார்கள்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார்.
இதனால் உங்களுக்கு இது மகிழ்ச்சி காலமாக அமையும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களது சிறப்பான செயல் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.