ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. அதில் நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் இருக்கின்றார்.
இந்நிலையில் இந்த மீன ராசிக்குள் அறிவாற்றலின் முக்கிய கிரகமான புதனும் எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் திகதி மீன ராசிக்கு இடம்பெயர்கின்றார். இந்த புதன் ராகுவின் அரிய சேர்க்கை 18 ஆண்டுகளின் பின்னர் நிகழவுள்ளது.
குறித்த பெயர்ச்சியின் காரணமாக குறிப்பிட்ட சில ராசியினர் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றனர். குறிப்பாக நிதி நிலையில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ராகு புதன் சேர்க்கையால் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றனர்.
ரிஷபத்தின் 11 ஆவது வீட்டில் இந்த அரிய சேர்க்கை நிகழ்வதால், ரிஷப ராசியினர் நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் அடைவார்கள்.
இவர்கள் எந்த துறையில் முதலீடுகளை செய்தாலும், அதன் மூலம் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இவர்களுக்கு பங்குச் சந்தை, லாட்டரி மூலம் வருமானம் கிடைக்கும் யோகம் அமையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்வதால் இவர்களுக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்கும். பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தொழில் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். முதலீடுகளின் மூலம் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு புதன் சேர்க்கை பாரியளவில் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கவுள்ளது.
இந்த ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த இணைப்பு நிகழ்வதால், இவர்களின் தைரியம் மற்றம் மன வலிமை அதிகரிக்கும்.
நீதிமன்ற வழக்குகளில் சாதக பலன்களை அனுபவிப்பார்கள். நிதி ரீதியில் செல்வாக்கு உயரும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவில் நெருக்கம் அதிகரிக்கும். அதிக வழிகளில் வருமானம் கிடைக்கும்.