ஜோதிட சாஸ்திரத்தின் படி வரப்போகும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் பல ராசிகளின் பலன்கள் பார்ப்பது சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், சூரியன் மற்றும் குருவுடன் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
இந்த யோகம் ஜோதிடக் கணக்கீட்டின்படி, ஜனவரி 3, 2025 அன்று, சூரியனும் குருவும் ஒருவருக்கொருவர் 150 டிகிரிகளில் இருப்பதால், உருவாக இருக்கிறது.
இந்த யோகத்தால் பல ராசிகள் தாக்கத்தை எதிர்கொண்டாலும் சில ராசிகளுக்கு இது நல்ல யோகத்தை கொடுக்கப்போகிறது. இது பற்றிய பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
2025 ஆம் ஆண்டின் உருவாகும் குரு மற்றும் சூரியனின் ஷடாஷ்டக யோகம் தனுசு ராசிக்கு நேர்மறையாக இருக்கும்.
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வியாபாரத் செய்ய பெரிய திட்டம் ஏதாவது வைத்திருந்தால் அது வெற்றியில் பல லாபத்துடன் முடியும்.
நிதி நலமை முன்பை விட சிறப்பாக அமையும்.
சிம்மம்
சூரியன் குருவின் ஷடாஷ்டக யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.
நீங்கள் தொழிலில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
நிதி நிலையில் நேர்மறையான முன்னேற்றம் இருக்கும்.
குடும்பத்திலும் பணியிடத்திலும் நம்பிக்கையயை பெறுவீர்கள்.
மிகப்பெரியளவில் நிதியில் லாபம் கிடைக்கும்.
மீனம்
புத்தாண்டின் முதல் வாரம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.
சூரியனின் செல்வாக்கால் நீங்கள் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
வியாபாரத்தில் நிதி நிலைமை மேம்படும்.
வேலை செய்யும் இடத்தை விட்டு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வியாபாரத்தில் நிதி முன்னேற்றத்திற்கான அறிகுறி உள்ளது.