இன்றைய தினம் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2025 புத்தாண்டு பிறந்துள்ளது.
பிறந்து முதல் நாள் என்றாலும் இன்றைய தினம் பழைய பொருட்களை அகற்றி விட்டு இந்த வருடத்திற்கான பொருட்களை எடுக்கும் நாளாக பார்க்கப்படுகின்றது.
அப்படி புது வருடத்தில் மாற்ற வேண்டிய பொருட்களில் ஒன்று தான் காலெண்டர். 2024 ஆம் ஆண்டு காலெண்டரை அகற்றிவிட்டு, புதிய காலெண்டரை சிலர் மாற்றியிருப்பார்கள்.
அப்படி காலெண்டரை மாற்றும் போது கண்ட இடங்களில் அவற்றை தொங்கவிடக்கூடாது. அதற்கான சரியான திசையில் தொங்க விட வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. ஏனெனில் வாஸ்துப்படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே எந்த பொருளை வீட்டில் வைத்தாலும் அதை சரியான இடத்தில் சரியான திசையை நோக்கி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, செல்வம் பெருகும்.
அந்த வகையில், வாஸ்துப்படி ஒரு காலெண்டரை வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கலெண்டர் மாட்ட சிறந்த திசை
1. வீட்டில் புதிய கலெண்டரை தொங்கவிடும் போது, பழைய காலெண்டரை அப்புறப்படுத்துவது அவசியம். புத்தாண்டு தொடக்கத்தை காட்டும் காலெண்டரை நாம் சரியான இடத்தில் தொங்க விட வேண்டும். இல்லையென்றால் வீட்டில் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும்.
2. சிலர் பழைய காலெண்டருக்கு மேல் புதிய கலெண்டரை மாட்டுவார்கள். இப்படி செய்தால் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏற்படும். அத்துடன் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான தடை கூட ஏற்படலாம்.
3. பொதுவாக இந்து மதத்தில் இருப்பவர்கள் சாமி படங்கள் கொண்ட காலெண்டர்களை பயன்படுத்துவார்கள். ஒருவேளை உங்கள் வீடுகளில் இருக்கும் பழைய காலெண்டரில் கடவுள் படம் இருந்தால் அதனை குப்பையில் போடாமல் ஆற்றில் விடுவது நல்லது.
4. வாஸ்துப்படி, கலெண்டரை மேற்கு திசையில் தான் மாட்ட வேண்டும். இப்படி செய்தால்ஆற்றல் சீராக இயங்கும். அத்துடன் வீட்டில் பண வரவும் அதிகமாகும்.
5. வடக்கு திசையிலும் கலெண்டரை வைக்கலாம். ஏனெனின் வடக்கு திசை செல்வத்தின் தெய்வமான குபேரன் குடியிருக்கிறார். இவர் இருக்கும் திசையில் நாள்க்காட்டி வைத்தால் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் பண வரவை கொண்டு வரும்.