ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன.
அந்தவகையில் இந்த புத்தாண்டில் தனுசு மற்றும் மகரத்திற்கு இடையில் புதன் இடப்பெயர்ச்சி அடைவது, மீன ராசியில் சுக்கிரன் நுழைவது, மகர ராசியில் சூரியன் இடப்பெயர்ச்சி அடைவது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இதனால் இந்த ஆண்டில் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும்.
தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதோடு அவர்களை தேடி பல வாய்ப்புகள் வரும்.
சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
புதிய உறவுகளை உருவாக்க இது சிறந்த நேரம்.
இல்லற வாழ்க்கை இணக்கமாக இருக்கும்.
முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையினர் ஆதரவாக இருப்பார்கள்.
நீண்ட காலமாக நிறைவேறாத சில ஆசைகள் இந்த மாதம் நிறைவேற வாய்ப்புள்ளது.
ரிஷபம்
புதிய பொறுப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் முயற்சிகளை அங்கீகரிப்பார்கள்.
வீட்டில் நல்லிணக்கம் நிலவும்.
பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும்.
பெரிய வெற்றிகளை அடைய மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
சிம்மம்
முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் திறக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
பணிபுரியும் இடத்தில் அனைவரது பாராட்டையும் பெறுவார்கள்.
மிகப்பெரிய வெற்றி தேடிவரும்.
குடும்பச்சூழல் சிறப்பாக இருக்கும்.
நம்பிக்கையும், உந்துதலும் குடும்பத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்.
துலாம்
பெரிய வெற்றிகளை எதிர்பார்க்கலாம்.
கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் சிறப்பான லாபத்தைப் பெறலாம்.
வாழ்க்கை துணையின் ஆதரவு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.