Loading...
இலங்கையில் அண்மைக் காலமாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Loading...
இருப்பினும், கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Loading...