ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நட்சத்திரப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியுடன் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.
இது 12 ராசிகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கக்கூடியது. சுக்கிரன் மகிழ்ச்சியை தரக்கூடியவர். இதனால் பல ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும்.
ஜனவரி 3ஆம் தேதி வரையில் சுக்கிரன் தனுஷ்டா நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். தற்போது ஜனவரி 4 ஆம் தேதி அதிகாலை 4.47 மணிக்கு சுக்கிரன் சதாபிஷா நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.
27 நட்சத்திரங்களில் சதாபிஷா 24 வது நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. சுக்கிரனின் இந்த நட்சத்திரப்பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு நற்பலனை கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்.
இதுவரை திருமணமாகதவர்கள் இந்த சுக்கிரப்பெயர்ச்சியின்போது துணை தேடலாம்.
குடும்பத்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
பல புனித தலக்கங்களுக்கு சென்று வழிபாடு செய்ய உதவும்.
முடிந்தவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த தான தருமத்தை செய் வேண்டும்.
விருச்சிகம்
சுக்கிரனின் இந்த நட்சத்திரப்பெயர்ச்சி உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகளை குறைத்து நல்லின்பத்தை கொடுக்கும்.
இந்தக் காலகட்டத்தில் வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
குடும்பத்துடன் நல்ல உறவை பேண இந்த காலகட்டம் உதவி செய்யும்.
இனிவரும் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
ஏதாவது கூட்டு வியாபாரத்தில் பல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேஷம்
சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் கொடுக்கும்.
பல இடங்களில் இருந்து பணத்திற்கான வரவு அதிகமாகும்.
இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தொழில் ஏதாவது செய்தால் அது பல முறைகளில் உங்களுக்கு லாபம் தீட்டி தரும்.
இதுவரை இருந்த தரியாதையை விட தற்போது நல்ல தரியாதை கிடைக்கும்.
புதிய வாகனங்கள் சொத்துக்கள் வாங்க நேரிடும்.