ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் முக்கியம் பெறுகின்றது. ஏனென்றால் புதன் புத்திக்கூர்மை மற்றும் வணிகத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.
இதனால் இவரின் இந்த இரட்டை பெயர்ச்சி எல்லா ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.புதனின் ராசி மாற்றம் சிலருக்கு வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்கும்போது, சிலருக்கு தடங்கல்களை வழங்குகிறது.
புதன் ஜனவரி மாதத்தில் இரண்டு முறை சஞ்சாரம் செய்கிறது, முதலில் தனுசு ராசியிலும், மாத இறுதியில் மகர ராசியிலும் பெயர்ச்சி அடைகிறது.இதனால் எந்த ராசிகளுக்கு சுப அசுப பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் ஒன்பதாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது.
பல முயற்ச்சிகள் செய்தால் அதற்கான பலனை விரைவில் பெறுவீர்கள்.
ஆசிரியர்களாக இருந்தால் இந்த பெயர்ச்சியால் பல நன்மைகள் பெறுவீர்கள்.
பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு நெருங்கியவர்களின் உறவு மேன்படும்.
புதனின் ஆசீர்வாதம் உங்கள் சாதனைக்கான பாதையை பலப்படுத்துகிறது.
கடகம்
இந்த இரட்டை புதன் பெயர்ச்சி உற்சாகம் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் கொடுக்கும்.
பல நாட்களாக முடிக்கப்டாத வேலைகள் இனிதே முடிவடையும்.
பல துறைகளில் வெற்றி வாய்ப்பு குவிந்து கொண்டே இருக்கும்.
மகரம்
மகர ராசிக்கு புதன் பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை அளிக்கும்.
புதன் பகவான் உங்களுக்கு நல்ல பாதையில் வழிநடத்துவார்.
இது வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
பல எதிர்பாரா அதிஷ்டங்கள் உங்களை வந்து சேரும்.