தற்போது 2025 ஆம் ஆண்டு சில நாட்களே ஆகின்றது. இதனால் இந்த வருடம் எப்படி அமையும் என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா.
இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இவர் இந்த வருடம் ஆரம்பத்தில் கூறிய கணிப்புகளில் பலிக்குமா? என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.
இது குறித்து தேடிப் பார்த்த போது பல்தரப்பட்ட உண்மைகள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 2025-ன் ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் பாபா வாங்காவின் மோசமான கணிப்புகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாபா வாங்காவின் மோசமான கணிப்புகள்
1. 2025 ஆம் ஆண்டில், உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் வரும். இது போன்று பல இயற்கை அழிவுகள் பூமியை அழிக்கும் எனக் கூறியிருந்தார். மக்களின் இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார். மக்களின் இடம்பெயர்வுகளை நாம் தினமும் பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.
2. நேபாளம்-திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டுள்ளது. நேபாளம், திபெத் ஆகிய நாடுகளை மோசமாக்கிய நில நடுக்கத்தினால் இதுவரையில் 100க்கு மேறப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்தியா- கொல்கத்தா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
3. 2025 ஆம் ஆண்டு உலக முடிவின் ஆரம்பம் என்றும் பாபா வாங்கா கூறுகிறார். புத்தாண்டின் ஆரம்பம் இப்படியான பேரழிவுகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
4. 2025 ஆம் ஆண்டில், முழு உலகமும் ஒரு கொடிய போரில் பல உயிர்களை காவு வாங்கும். சிரியாவின் வீழ்ச்சியுடன் ஆரம்பமாகும் இந்த யுத்தம் மேற்குலகிற்கும் கிழக்கிற்கும் இடையில் ஆரம்பமாகவுள்ளது. இதுவே மூன்றாம் உலக போராக பார்க்கப்படுகின்றது.
5. இந்த யுத்தம் ஆரம்பித்தால் ஏராளமான உயிர் சேதம் ஏற்படும். அத்துடன் மேற்கத்திய நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு போகாமல் தடைப்படும். இதனால் பசியும் பட்டினியும் நிரந்தரமாகும்.
6. “பல்கேரியாவின் நாஸ்ட்ராடாமஸ்” என்கிற பாபா வாங்காவின் கணிப்பு ஒன்றுக்கு மேற்ப்பட்ட தடவைகள் இன்றைய வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுநோய், அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீதான வான்வழித் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் ஆகியன உள்ளடங்கும். பாபா வாங்காவின் கணிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் இனி வரும் நாட்கள் மோசமாகும் எனக் கூறப்படுகிறது.