வேத ஜோதிடத்தின் பிரகாரம் கிரக நிலைகளுக்கும் ராசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அதாவது கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அதிபதியாக திகழும் செவ்வாய் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியாக விளங்கும் புதன் ஆகிய கிரகங்களின் சேர்கை இன்று ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியுள்ளது.
அவ்வாறு உருவாகியுள்ள அரிய ஷடாஷ்டக யோகத்தினால் இன்று முதல் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது. அவை எந்தெந்த ராசிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த ஷடாஷ்டக ராஜயோகமானது வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.
பணவரவு மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. குடும்ப வாழ்வில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.
தொழில் ரீதியில் ஆர்வம் மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும். நிதி நிலையில் எதிர்ப்பார்த்ததை விட அதிக முன்னேற்றம் ஏற்படும். இன்று முதல் இவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகின்றது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஷடாஷ்டக ராஜயோகமானது எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்களை அதிகரிக்கும். விலையுயர்ந்த பரிசுகளால் மகிழ்சியடைவீர்கள்.
தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் இந்த காலகட்டம் நல்ல லாபத்தை கொடுக்கும்.
ஆரோக்கிய விடயங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் சீராகி, மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று முதல் பண விடயங்களில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போய்விடும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஷடாஷ்டக யோகம் சிறந்த பணவரவை கொடுக்கும். பல்வேறு வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் உருவாகும்.
குழந்தைகளால் சந்தித்த பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழில் நிலையில் அதிக நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்தமாக வேலை வீடு தேடி வரும். நிதி நிலை மின்னல் வேகத்தில் உயரும்.