ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போலி மனிதர்களை சுலபமாக கண்டுப்பிடித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால் இவர்களை யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாது.
உண்மையில் போலியான நபர்களை கண்டறிவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.இப்படி தங்களிடம் பொய் சொல்லும், நடிக்கும் போலி மனிதர்களை நொடிப்பொழுதில் கண்டுப்பிடித்துவிடும் அவாத்திய திறமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கூர்மையான பகுத்தறிவு பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு விடயத்தை பல கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து அறியும் திறன் கொண்டவர்கள்.
அதனால் இவர்களிடம் பொய் சொல்லும் அல்லது ஏமாற்ற நினைக்கும் நபர்களை, அவர்களின் நடவடிக்கைகளை வைத்தே எளிமையாக கண்டறியும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
எந்த விடயத்திலும் நேர்மை மற்றும் உண்மையை அதிகம் விரும்பும் இவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உளவியல் கற்கைகளில் அதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே மற்றவர்கள் மனதில் என்ன திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்பதை இவர்களின் பேச்சின் மூலம் அனுமானிக்கும் அளவுக்கு திறமை சாலிகளாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் ஒருவரின் வெளித்தோற்றத்திற்கு உள்ளே மறைந்திருப்பதை உண்மை குணத்தை அறிவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிந்தவர்கள் இயல்பாகவே நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்பள்.
இவர்களின் சாகச மனப்பான்மை எப்போதும் சுதந்திரத்தின் மீது தீராத தாகம் கொண்டதாக இருக்கும்.அவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
இவர்களை ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் யார் வந்ததாலும், இவர்களால் விரைவில் கண்டுப்பிடித்துவிட முடியும்.
அவர்கள் இயற்கையாகவே உண்மையைத் தேடுபவர்களாக இருப்பமதால், ஏமாற்ற நினைப்பவர்கள் இவர்களிடமிருந்து தப்பவே முடியாது.