நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.
இவர் ஆன்மா, மரியாதை, உயர் பதவி மற்றும் தலைமைத் திறன் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
பொங்கலன்று சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக அந்நாள் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள பொங்கல் அன்று நடக்கும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 7 ராசிகள் அற்புதமான யோகத்தை பெறவுள்ளனர்.
மேஷம்
தொழில் வாழ்க்கையில் புதிய ஆற்றலையும் நேர்மறை விளைவுகளையும் கொண்டுவரும்.
பணியிடத்தில் அதிக அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள்.
பணியிடத்தில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வீர்கள்.
கடின உழைப்பு, படைப்பாற்றலுக்கான புதிய அடையாளம் மற்றும் நிதி நன்மைகளை வழங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கடகம்
சாதகமான செய்திகள் உள்ளன.
ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும்.
வணிகத்தில் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.
வீட்டில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பீர்கள்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
உடல் ஆர்ரோக்கியம் நன்றாக இருக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கன்னி
வெற்றியைக் கொண்டு வரும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
உறவை வலுப்படுத்த துணைவர் தனது செல்வாக்கைக் காட்டுவார்.
வீட்டில் குழந்தைகளின் சாதனைகள் உங்களைப் பெருமைப்படுத்தும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
அபாரமான வெற்றிகளை குவிப்பார்கள்.
இல்லற வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும்.
அடுத்த ஒரு மாதத்திற்கு, பேச்சில் சிறிது கடுமையும், ஆக்ரோஷமும் இருக்கலாம்.
குடும்ப வாழ்க்கை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
பல கடினமாக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.
மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.
அரசாங்க பணிகள் சிக்கலின்றி நடந்து முடியும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும்.
வெளிநாட்டு தொடர்புகள் மூலம் புகழ் பெறுவார்கள்.
செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
செலவு உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்காக இருக்கும்.
மீனம்
பல வித நல்ல பலன்களைத் தரும்.
வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.
மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
இந்த முறை அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
புதிய வாய்ப்புகளைத் தரும்.
தீட்டும் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறும்.
சமூகத்தில் நற்பெயரும் அதிகரிக்கும்.