எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக முடியும். பயணத்தால் பலன் உண்டு.
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். தொழில், வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இனிய சம்பவங்கள் நடைபெறும்.
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பப் பொறுப்புகள் கூடும்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.
யோகமான நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரலாம்.
சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கை கூடும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். தொலை பேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் வருகை உண்டு. வரவு திருப்தி தரும்.
ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.