ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிப்பலன்கள் பற்றி கூறப்படும். கிரகப்பெயர்ச்சிகள் படி இம்மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் சென்ற நிலையில், குரு பகவானுடன் இணைந்து நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது.
இதன்படி குருவும் சூரியனும் ஒருவருக்கொருவர் 5 மற்றும் 9 ஆம் இடத்தில் இருக்கும்போது, குரு-சூரிய நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல யோகத்தையே கொடுக்கும்.
இதனால் ஒருவருக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். தலைமைத்துவ திறன், உயர் பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவும் இது உதவும். எனவே இந்த பலன்கள் எந்த ராசிகளுக்கு கிடைக்கப்போகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.
மேஷம்
இந்த குரு-சூரிய நவபஞ்சம யோகம் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரும்.
எதிர்பாராத முதலீட்டால் பல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பழைய கடன்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீங்கள் செய்யும் வேலையில் புதிய வாய்ப்புக்கள் கிடைத்து பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலில் புதிய யோசனைகள் யோசித்து அதிலிருந்து நல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகம்.
துலாம்
குரு-சூரியன் நவபஞ்சம யோகம் துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும்.
பொருளாதாரத்தில் செழித்து வளர பணவரவு அதிகமாக கிடைக்கும்.
புதிய புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வந்து சேரும்.
சொந்தமாக தொழில் செய்பவர்கள் பலத்த லாபத்தை சந்திப்பீர்கள்.
வியாபாரம் செய்தால் அதில் பல நன்மைகளும் லாபமும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் நன்மை பயக்கும்.
பணவரவால் நிதி நிலைமை மேம்படும். கும்ப ராசிக்காரர்களுக்கு இது பணத்தைச் சேமிக்கும் காலம்.
பல பெரிய விடயங்களில் மூதலீட செய்தால் அதில் பல லாபம் கிடைக்கும்.
புதிய வியாபாரம் தொழில் தொடங்க பல வாய்ப்புக்கள் கைகூடி வரும்.
சமூகத்தில் பலத்த உயர் மரியாதை கிடைக்கும்.
மாயவர்களாக இருந்தால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.