எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி விடயங்கங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவனுக்கும் புகுந்த வீட்டுக்கும் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார்டகளாம்.
அப்படிப்பட்ட பெண்கள் எந்த திகதிகளில் பிறந்தவர்கள் எனவும் இவர்களின் விசேட குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.
எண் 6
எண் கணிதத்தில் சாஸ்திரத்தின் அடிப்படையில் 1-9 வரையிலான எண்களில் உலகத்து இன்பங்களுக்கும், செல்வ செழிப்புக்கும் அதிபதியாக இருக்கும் சுக்கிரபகவானுடன் எண் 6 மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றது.
எனவே 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் சுக்கிரகின் ஆதிக்கத்தை அதிகம் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை இயல்பிலேயே ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு அதிக செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்கள்.
குறிப்பாக தங்களின் கணவருக்கு நிதி விடயங்களின் வாழ்க்கை முழுவதும் பெரிதும் துணைப்புரிவார்கள். இந்த திகதிகளில் பிறந்த பெண்களின் கைகளில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
விசேட குணங்கள்
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் காதல் வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்வில் சின்ன சின்ன விடயங்களுக்கு இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தை கொண்டவரை்களாக இருப்பார்கள்.
இருப்பினும் இவர்கள் அன்புக்குரியவர்களை மிகவும் உயர்வாக நினைப்பார்கள். இவர்களால் எதையும் செய்ய முடிகின்ற போதிலும் கணவனுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள்.
திருமணம் செய்துக்கொண்ட பின்னரும் கூட தொழில் வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பணியாற்றுவார்கள்.
புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் இவர்கள் ஒருபோதும் பிரித்து பார்க்க மாட்டார்கள். வாழ்க்கை முழுவதும் கணவனுக்கு பணவிடயத்தில் பக்கபலமாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு இருக்கும்.