வடக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று வடக்கு மாகாணசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துகின்றனர்.
இன்று வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமது கோரிக்கையை குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி நேற்றையதினம் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், தமது போராட்டத்திற்கு எந்தவொரு சாதகமான முடிவும் கிடைக்காத நிலையில், அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் கவனத்தை ஈர்க்கும் முகமாக இன்று வடக்கு மாகாண சபை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.