சிறீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஐ. நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது
இந்த நிறுவன விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், ரி.பி.ஜி. நிறுவனத்துக்கு அடுத்த மாதமளவில் சிறீலங்கன் விமானசேவை நிறுவனத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 1992ஆம் ஆண்டு சிறீலங்கா விமானசேவை நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அறிவித்தபோது அமெரிக்காவின் பிரிஐ நிறுவனம் தமக்கு வழங்குமாறு கோரியது. இருப்பினும் அப்போதைய அரசாங்கம் அதனை எமிரேட்ஸ் சேவைக்கு விற்பனை செய்தது.
தற்போதைய அரசாங்கம் சிறீலங்கா எயார் லைன்ஸ் விமானசேவையை பிரிஐ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.