தனுஷ் தற்போது காலில் சக்கரம் கட்டி நடித்து வருகின்றார். ஒரு காலக்கட்டத்தில் தொடர் வெற்றிகளை பார்த்த வந்த தனுஷிற்கு சுள்ளான் படம் பெரும் வீழ்ச்சியை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து பல படங்கள் தோல்வி தான், சற்று திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்தார்.
ஆனால், அதை தொடர்ந்து வெளிவந்த பரட்டை என்கின்ற அழகுசுந்தரம் படுதோல்வியடைந்தது, இப்படத்தை முதன் முதலாக இயக்கவிருந்தது, டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் தான்.
மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருந்தார், பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, இரண்டு பேருமே அந்த படத்திலிருந்து விலகினார்கள். ஏன் விலகினார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை.
அதை தொடர்ந்து இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார், அதன் பிறகு ராஜு சுந்தரம் அஜித் நடிப்பில் ஏகன் படத்தை இயக்கினார் என்பது வேறுக்கதை.