இன்றைய நவீன உலகில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு தலைமுடி பாதிப்பு அதிகமாகி வருகிறது.
போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக தலைமுடி ஆரோக்கிய பாதிப்புகளான முடி உதிர்தல், முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றது. எனவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தலைமுடியை பாதுகாப்பது அவசியம், அதனை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
சிலர் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஷாம்புகள், எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளைக் கையாள்கின்றனர். ஆனால், அவை சில சமயங்களில் இருக்கும் பிரச்சினையை அதிகப்படுத்தி விடுகிறது.
இதனால் வீட்டில் செய்யப்படும் இயற்கை வைத்தியங்களை கையாளலாம். இந்த வைத்தியத்தால் ஏற்படும் பாதிப்பைகளையும் பார்க்க பலன்கள் ஏராளம்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகமாக்கும் இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படும் பாசிப்பயறு கலவை தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாசிப்பருப்பு Hair Peck
பாசிப்பயறு முட்டை, தயிர் ஆகிய மூன்றையும் இரவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
நமது தலைமுடிக்கு தேவையான அளவு பாசிப்பருப்பை எடுத்து ஒரு ஈரத்துணியில் கட்டி வைக்க வேண்டும்.
காலையில் எடுத்து பார்க்கும் பொழுது அந்த பாசிப்பயறு முளைகட்டி இருக்கும். அதன் பின்னர், முளைகட்டிய பருப்புடன், தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் பாசிப்பயறு கலவையுடன் ஒரு முட்டையை சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் இரசாயனங்கள் இல்லாத ஹோம்மேட் ஹேர்பேக் தயாராகி விடும்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் முடி உதிர்வு, பொடுகு ஆகிய பிரச்சினை நீங்கி, தலைமுடி வளர்ச்சி இரட்டிப்பாகும்.