அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் இரட்டை நட்சத்திரங்கள். இவர்கள் இருவரை பற்றியும் பலரும் அதிகம் பேசாமல் இருக்கமாட்டார்கள்.
இருவரின் படங்கள் வந்தாலும் சினிமா களம் ரொம்பவே சூடுபிடிக்கும். இருவருக்குமே நல்ல இயல்பான பண்புகள் உண்டு.
அஜித்தின் முக்கிய சில கேரக்டர்கள் பற்றி நம் பக்கத்தில் சொல்லியிருந்திருப்போம். விஜய் பற்றியும் கேள்விப்பட்டிருபீர்கள்.
இருவரது ரசிகர்கள் சிலர் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டாலும் அஜித், விஜய் ஒற்றுமை எப்போதும் குறைந்ததில்லை.
படப்பிடிப்புகளில் அஜித் தனது டேக் முடிந்தாலும் அங்கேயே உட்கார்ந்து மற்றவர்கள் நடிப்பதையும் பார்த்துகொண்டிருப்பார். ஓய்வெடுக்கக்கூட கேரவன் பக்கம் போகமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எல்லோருக்கும் முன்னதாகவே அங்கு வந்துவிடுவாராம்.
விஜய் படப்பிடிப்பில் இருந்தால் அந்த இடமே மிக ஜாலியாக இருக்கும். தனக்காக யாரும் காத்திருக்கக்கூடாது என்பதால் சீக்கிரமே படப்பிடிப்புக்கு வந்துவிடுவாராம்.
அஜித் போலவே விஜயும் ஷூட்டிங் முடிந்த ஒவ்வொரு நாளிலும் கடைசியில் எல்லோரிடமும் பேசிவிட்டு கைகொடுத்து விட்டு தான் செல்வாராம்.
நல்ல விஷயங்களை யாரிடம் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளளாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் தானே.