நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
அதற்கு முன்னதாக சனி பகவான் பிப்ரவரி 2ஆம் திகதி குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும்.
மேஷம்
வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும்.
வீடு கட்டும் திட்டங்கள் அல்லது சொத்து பரிவர்த்தனைகள் அனுகூலமாக அமையும்.
வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கடகம்
அனுகூலமான நன்மைகளை அளிக்கும்.
நிலம், வாகனம் மற்றும் வீடு வாங்க/விற்க எண்ணம் கொண்டவர்களின் எண்ணம் நிறைவேறும்.
வேலையில் போனஸ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
இது செல்வத்தை அதிகரிக்கும்.
முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும்.
சனி பகவானின் ஆசிர்வாதத்தால், செல்வமும் புகழும் அதிகரிக்கும்.
கன்னி
அனுகூலமான பலன்களை அளிக்கும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பண வரவு அதிகமாகும்.
தொழிலில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும்.
துலாம்
துலா ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி அனுகூலமான பல நன்மைகளை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள். மனதை வாட்டி வந்த தொல்லைகள் தீரும். பல நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
மகரம்
வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
இந்த ஆண்டு, சொத்து சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
பொருளாதார நிலை மேம்படும்.
வாழ்க்கை இன்பமாக இருக்கும்.