ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் மற்றும் ஆளுமையில் பெருமளவான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எவ்வளவு உச்சத்தை அடைந்தாலும், கோடிகளில் பணத்தை சம்பத்தித்தாலும் ஒரு போதும் பணத்திற்காக தங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார்களாம்.
அப்படி வெற்றியை குவித்தாலும் குணத்தால் எந்த நிலையிலும் அதே நேர்மையையும், பணிவையும் கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போதும் தங்களின் எளிமையையும் நேர்மையான குணத்தையும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே நிதி முகாமைத்துவ அறிவு அதிகமாக இருக்கும்.
பணத்தின் மதிப்பைப் நன்றாக புரிந்துகொண்டவர்களாக இருக்கின்ற போதும் பணம் தான் வாழ்க்கை என்று வாழாது அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
வாழ்வில் எவ்வளவு பணம் சம்பாதித்ததாலும் இவர்களின் குணத்தில் கடுகளவும் மாற்றம் ஏற்படாது. அன்புக்குரியவர்களுக்டகாக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுடன் ஒருபோதும் தங்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து துன்பப்பட மாட்டார்கள். தங்களிடம் இருப்பதை முழுமையாக அனுபவித்து மகிழ்சியடையும் குணம் இவர்களிடம் இருக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தாலும் அவர்களின் கருணையில் எந்தவித மாற்றமும் இருக்காது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உன்னத குணம் கொண்டவர்களாக இருப்பார்பகள்.
நிதி ரீதியில் வாழ்வில் உச்சத்தை தொட்டாலும் தங்களின் குணத்தில் சிறிதளவும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டார்கள்.
தங்களின் பணம் அன்புக்குரியவர்களை மகிழ்சிக்கின்றதா என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.அவர்களை கஷ்டப்படுத்தி பணம் சம்பாதிக்க மாட்டார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாகவும், வாழ்வில் ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கு கோடிகளில் பணம் கொடுத்தாலும் தங்களின் இந்த குணத்தை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் வாழ்வில் எந்த நிலையிலும் பணத்திற்காக வெற்றிபெற வேண்டும் என நினைக்காது தங்களின் வெற்றி பணத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்டகள்.
பிறப்பிலேயே லட்சிய வாதிகளான இவர்கள் தங்களின் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார்கள்.