வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராகு மற்றும் சனியின் சேர்க்கை மூலம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மையை உண்டாக்கப்போகின்றது. அவர்கள் எவ்வித நன்மைகளை பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சனி சேர்க்கை நிகழவுள்ளது.
நீங்கள் செய்யும் தொழிலில் பல நன்மைகளை பெறுவீர்கள்.
எந்த வேலையில் இருப்பவர்களக்கும் அவ்வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.
காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
உங்கக்கு பல வழிகளில் இருந்து நன்மைகள் வநது சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மற்றவர்களிடம் நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்கு திரும்பவும் அப்படியே வந்து சேரும்.
ஆடம்பர வாழ்க்கையுடன் புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன் பதவி உயர்வும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி ராகு சேர்க்கை நிகழவுள்ளது.
உங்கள் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புக்கள் தேடி வரப்போகின்றது.
உங்கள் கவர்ச்சியான பேச்சால் அனைத்தையும் சாதிப்பீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் பல நல்ல வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.
பணத்தின் தேவை உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.