தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு அமீர் ஆர்யாவை வைத்து `சந்தனத்தேவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா, சத்யா, அமீர் மூவரும் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கின்றனர். இப்படத்தை அமீரின், அமீர் பிலிம் கார்பரேசன்(ஏஎப்சி) நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார்.
முன்னதாக இப்படத்தில் நடிக்க இனியாவிடம் கேட்கப்பட்டது. அவரும் நடிக்க சம்மதித்து நடிப்பதாக இருந்தது. அந்த வேடத்தில் நடிக்க உடல் கொஞ்சம் குண்டாக இருக்க வேண்டும் என்று அமீர் கேட்டுக் கொண்டார். உடலை குண்டாக்கினால் மெலிவது சாதாரண விஷயம் அல்ல என்று யோசித்த இனியா, அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு வேறு கதாநாயகியை அமீர் தேடி வருகிறார்.