தற்போது இருக்கும் நிலைமையில் பணம் மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது.
சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பணத்தை துரத்திக் கொண்டு செல்வதில் கழித்து விடுகிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதுப்புது வழிகளை தேடுவதில் அவர்களின் வாழ்நாள் முடிந்து விடுகின்றன.
எப்படியாவது செலவுகளை குறைத்து விட்டு பணத்தை சேமித்து வைப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதேசமயம், இன்னும் சிலர் பணக்காரராகாமல் இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, குடும்பம், காதல் என அனைத்தும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அவர்கள் தனிப்பட்ட மகிழ்ச்சி, அனுபவங்கள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில், வாழ்க்கையில் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்கள் என்னென்ன ராசியில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பண ஆசை இல்லாத ராசிக்காரர்கள்
மீனம்
மீன ராசிக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடாமல் பணத்தை வைத்து கொண்டு எப்படி சாதிக்கலாம் என யோசிப்பார்கள். எப்போதும் அர்த்தமுள்ள விடயத்தை மாத்திரமே பேசுவார்கள். இவர்கள் செல்வத்தை குவிப்பதற்காக அயராது உழைக்கும் எண்ணம் பயனற்றது என நினைப்பார்கள். இதனால் மகிழ்ச்சி சார்ந்த விடயங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் அனைத்தையும் விட சுதந்திரம் முக்கியம் என நினைப்பார்கள். பணத்திற்கு பின்னால் ஓடுவதிலும் பார்க்க பணத்தை வைத்து எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் என நினைப்பார்கள். அவர்கள் சாகசக்காரர்கள், எதிர்காலத்திற்காக பணத்தை நோக்கி ஓடுவதை விட, பயணம், கற்றல் மற்றும் சாகசம் போன்ற அனுபவங்களை கற்றுக் கொள்வார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் நினைத்தப்படி வாழ்வார்கள். அதில் பணம் இருக்க வேண்டும் என யோசிக்கமாட்டார்கள். பணத்தின் பின்னால் ஓடுவதை விட புதிய யோசனைகள் மற்றும் உலகில் மாற்றத்தை பார்க்க அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். பணம் சம்பாதிக்கும் திறன் இருந்தாலும், அதனை பெரிதாக எண்ண மாட்டார்கள். வேலையில் முன்னேற்றம் இருப்பதை விரும்புவார்கள்.