முன் காலங்களில் அடர்ந்த மரங்கள் இருந்த வனப்பகுதிகளிலேயே ஆலயங்கள் உருவாகின. பின்னர் வனப்பகுதிகள் நகரங்களாக உருமாற்றம் செய்யப்பட்டபோது, அந்தப் பகுதியில் எந்த மரம் அதிகமாக இருந்ததோ, அந்த மரம் கோவிலில் தல விருட்சமாக வைக்கப்பட்டு வந்ததாகச் சொல்வார்கள்.
பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும். ஆனால் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில், 8 தல விருட்ச மரங்கள் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்.
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு தலவிருட்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது.
அதன்பிறகே கொடிமரம் இருக்கிறது. கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மேல் பகுதியில் ஏழு சடைகள் காணப்படுகின்றன.