பொதுவாகவே மனதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துமான திறமைகள் இருப்பது போன்று சில சிறப்பு குணங்குளும் இருக்கும்.
ஒருவரின் விசேட குணங்களில் பிறப்பு ராசியின் ஆதிக்கம் பெருமளவில் இருக்கும் என தொன்று தொட்டு ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் பிறப்பிலேயே மிகுந்த பொறுமைசாலியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கை என்பது அசுர வேகத்தில் வேகமாக கடந்து செல்ல வேண்டிய ஒரு ரோலர் கோஸ்டர் அல்ல, மாறாக அனுபவிக்க வேண்டிய ஒரு மகிழ்ச்சியான சவாரி என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கடந்து வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.
மற்றவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத துன்பங்களை இவர்கள் வாழ்வில் அனுபவிக்கின்ற போதும் கூட ஒருபோதும் பொறுமையை இழக்க மாட்டார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் அதீத பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
அதீத கற்பனை திறன் கொண்டவர்களாகவும், இரண்டு உலகங்களில் வாழும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் நிஜ வழ்க்கையில் நடக்காத விடயங்களையும் தங்களின் கற்பனையில் வாழும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் குற்றங்களை மன்னிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகரம்
ஒழுக்கத்தால் இயக்கப்படும் இந்த ராசியினர் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் தெளிந்த சிந்தனையுடனும் பொறுமையாகவும் இருக்கும் குணம் கொண்டவர்கள்.
இவர்களின் வாழ்க்கை பாதையில் ஏற்படும் எந்தவொரு தடைகளும் அல்லது பின்னடைவுகளும் இவர்களின் பொறுமையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வார்கள்.
இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இவர்களின் பொறுமையும் விடாமுயற்ச்சியும் தான் காரணமாக இருக்கும்.