சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக பார்க்கப்படுகிறார்.
சுமாராக இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாளைய தினம், மார்ச் 29 ஆம் தேதி அன்று தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.
மீன ராசியில் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரை சனி இருப்பார் என்றும் ஜோதிடம் கூறுகிறது.
30 ஆண்டுகளுக்கு பின்னர் சனி பெயர்ச்சி சனி அமாவாசை நாளில் நடப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிகப்பட்ச பலனை கொடுக்கப்போகிறார்.
அப்படியாயின், நாளைய தினம் உச்சக்கட்ட பலனை அனுபவிக்கப் போகும் ராசிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் 7 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். இவர், 9 ஆவது வீட்டிற்கு செல்வதால் அதிர்ஷ்டம் கிடைக்கும். நமக்குள் இருக்கும் நீண்ட கால பிரச்சினைகள் குறைந்து நிம்மதியாக வாழ ஆரம்பிப்போத். வாழ்க்கையில் புதிய நல்ல மாற்றங்களை காணலாம். நிதி நிலையில் முன்னேற்றம் இருப்பதால் புதிய வியாபாரங்கள் செய்வீர்கள். நிலுவையில் இருக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் இதனால் உங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு 5 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். சனிபெயர்ச்சியின் போது 7 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இந்த பெயர்ச்சியால் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. னி பகவான் கன்னி ராசியின் 9, 1 மற்றும் 4 ஆவது வீடுகளின் மீது தனது பார்வையை பதிப்பதால், வேலையில் வெற்றிக் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீங்கள் பணிச் செய்யும் இடத்தில் வழக்கமாக இருக்கும் மதிப்பை விட மரியாதை அதிகமாக கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி யின் 4 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், சனிப்பெயர்ச்சிக்கு பின் 6 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இந்த தாக்கத்தால் இவர்களுக்கு பணம் வந்துசேரும். தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகளை சாமர்த்தியமாக தோற்கடிக்கும் ஆற்றல் வரும். நல்ல செல்வாக்கு பெற்ற மனிதராக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களாக இருப்பவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.