Loading...
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக மூத்த சகோதரர் தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் சாந்த மேத்யூ மாவத்தை, ஏகல பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஆவார்.
Loading...
சம்பவத்துடன் தொடர்புடைய ஏகல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...