ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் இவர்களின் எதிர்கால வாழ்க்கை, நேர்மறை, எதிர்மறை குணங்கள், நிதிநிலை, அதிர்ஷ்டம் ஆகியவற்றுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பிலேயே ராஜ யோகம் கொண்டவர்களாம். அப்படி அதீத அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசியினர் அதிர்ஷ்டசாலிகள் என்று அறியப்படுகிறது. சூரியன் மேஷத்தில் இருக்கும்போது, அது உச்சத்தில் அல்லது கணிசமான அளவு சக்திவாய்ந்த செல்வாக்கில் இருக்கும்.
சூரியன் நமக்கு ஒளி, நம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களைக் கொண்டுவருகிறது எனவே தான் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசியினர் வாழ்வில் அதழக செல்வாக்குடன் இருப்பார்கள்.
அவர்களின் உள்ளுணர்வு விரைவானது, தயக்கமின்றி செயல்படுவார்கள் இவர்களிடம் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
சிம்மம்
சூரிய பகவான் சிம்ம ராசியை ஆளுகிறார் எனவே, சிம்ம ராசிக்கு சூரிய பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
இவர்கள் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்கள் பொருந்தியவர்களாகவும், ராகயோகம் கொண்ட அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள்.
அவர்கள் சாத்தியமான விளைவுகளை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிச்சயம் அதிகாரம் பொருந்திய பதவியில் இருப்பார்கள்.இவர்கள் வாழ்வில் பணத்துக்கு குறைவே இருக்காது.
ரிஷபம்
அன்பு, வசீகரம் மற்றும் காந்தத்தன்மையின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். எனவே இவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆடம்பரத்தை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் வசீகர தோற்றம் கொண்டவர்களாகவும், காந்த பார்வை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் பிடிவாதமாக இருந்தாலும் இது அவர்களின் வெற்றியுடன் தொடர்புடையது. இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.