2025ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் இக்காலகட்டத்தில் மீன ராசியில் அற்புதமான கிரகங்களின் சேர்க்கையும், அதனால் ராஜயோகமும் உருவாகவுள்ளது.
அதாவது மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய 5 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.
இந்த 5 கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மகரம்
ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
அதோடு நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
அதிர்ஷ்ட கதவு திறந்து, பண மழை கொட்டும்.
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
மிதுனம்
வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
இதன் மூலம் இலக்கை எளிதில் அடைவீர்கள்.
உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
சிலருக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
வணிகம் வேகமாக முன்னேறும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கன்னி
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறக்கூடும்.
ஆனால் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை மேம்படும்.
நீண்ட நாள் கனவு நனவாகும்.
ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்ப்புக்கள் கிடைக்கும்.