கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.
முக்கியமாக சூரியன் மேஷ ராசியில் பயணிக்கும் வேளையில், மே மாதத்தில் புதனும் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர்.
மிதுனம்
வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
பல வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சூரியனின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம்.
முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
இதன் மூலம் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெற வாய்ப்புள்ளது.
இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
சிம்மம்
வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கம்.
மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம்.
புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம்.
நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்
. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.