Loading...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன்மனைவிமீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப் பறித்து கணவன்மீது வீசியுள்ளார். இதன் காரணமாக கணவன் அசிட் வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகி தற்போது யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இருப்பினும் குறித்த நபரின் கண் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும், அத்துடன் அவருடைய கையில் கத்தி வெட்டும் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...