ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கான அத்தனை தடையும் நீங்கியதால், ஏற்கெனவே அறிவித்தபடி இன்று தமிழகத்தில் 450 அரங்குகளில் வெளியாகிறது.
நிதிப் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வந்தது. நேற்று இரவு வரை படம் வருமா வராதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தனர் சிங்கார வேலன், போத்ரா போன்றவர்கள்.
ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் இதர தயாரிப்பாளர்கள் உறுதியாக நின்று போராடியதன் விளைவாக அத்தனை சிக்கல்களும் நேற்று இரவே தீர்ந்தது. அதைத் தொடர்ந்து படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் கணிசமான அரங்குகளில் படம் வெளியாகிறது.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் மொட்ட சிவா கெட்ட சிவா இன்று வெளியாகிறது. படத்துக்கான முன்பதிவு திருப்திகரமாக உள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் நாள் அத்தனை அரங்குகளுமே கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் என்பதால் தயாரிப்பாளர் தரப்பும் சந்தோஷத்தில் உள்ளது.