மும்பை மருத்துவமனையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர் கணவர் அபிஷேக் பச்சன் தங்கியிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றனர்.
மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
விசாரித்துப் பார்த்ததில், ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த இரண்டு வாரங்களாக ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த அபிஷேக் பச்சன், நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு மாமனாரைக் காண வந்துள்ளார். சமீபத்தில் தன் மகள் ஆரத்யாவின் ஸ்போர்ட்ஸ் டேவில் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா, அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று தந்தையுடன் இருக்கிறார்.