பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வெள்ளை சேலைக்கு பதில் சிவப்பு சேலை அணிந்து நடமாடுவது சக கைதிகளால் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் வெள்ளை சேலை தான் கட்ட வேண்டும் என்பது விதியாகும். ஆனால் சசிகலா சில நாட்களாக சிறப்பு அனுமதி பெற்று சிவப்பு நிற சேலையுடன் உலா வருகிறார்.
இந்த மாற்றத்துக்கு சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தான் காரணமாம்.
அவர் கல்லீரல் பிரச்சனையால் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சிறையில் சசிகலா வெள்ளை புடவை அணிவதால் ஏற்படும் தோஷம் தான் நடராஜனை தாக்குகிறது.
அதனால் சிவப்பு சேலை கட்டினால் நடராஜன் உடல்நிலை சரியாகிவிடும் என ஜோதிடர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து தான் அவர் சிவப்பு சேலை அணிந்து சிறையில் வலம் வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.